சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்த அம்மம்பாளையத்தில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் பி.கே.எஸ். ரமேஷ் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
திமுக-வுடன் கூட்டணி அமைப்பது குறித்து எங்கள் கட்சியின் 5 பேர் கொண்ட குழுவின் முதல் கட்டப் பேச்சுவார்த்தை முடிந்தது. 2-ஆம் கட்ட பேச்சுவார்த்தை இன்னும் 2 நாள்களில் பேசப்பட்டு நல்ல தகவல் தெரிவிக்கப்படும். திமுக கூட்டணி போட்டியிடும் 40 தொகுதிகளிலும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் இரவுபகல் பாராமல் கூட்டணி வெற்றிக்குப் பாடுபடுவோம்.
தற்போது அதிமுக-பாமக இடையேயான கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணியாகும். அதிமுகவின் வாக்குகளை டிடிவி. தினகரன் பிரிப்பார்.
கடந்த 2009-இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது அதிமுகவுடன் 7 தொகுதிகளில் நின்று போட்டியிட்ட பாமக தோல்வியைத் தழுவியது. அதுபோல இந்த முறையும் பாமக தோல்வியைத் தழுவும். இந்தக் கூட்டணி குறித்து பாமக-அதிமுகவின் தொண்டர்களிடையே சலசலப்பு இருந்து வருகிறது.
ஏழைகளுக்கு ரூ. 2000, ரூ. 6000 வழங்கும் நிதித் திட்டங்களை கடந்த 3 வருடங்களுக்கு முன்பே மத்திய மாநில அரசுகள் வழங்கியிருந்தால் அது நல்ல ஆட்சி என்று கூறலாம். ஆனால், இப்போது தேர்தலை ஒட்டி வழங்குவது மக்கள் விரோதத்தைத்தான் சம்பாதிக்கும் என்றார் அவர்.
பேட்டியின் போது கட்சியின் ஒன்றியச் செயலாளர் விஜயகுமார், மாவட்ட அவைத் தலைவர் பிரபாகரன், துணைப் பொதுச் செயலாளர் சக்தி நடராஜ், தங்கவேல், பொருளாளர் கே.சி.பாலு, மாநில நிர்வாகிகள் சூரியமூர்த்தி, விஷா சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
நெல்லை, தென்காசியில் தொடா் அரிவாள் வெட்டு: 8 போ் கைது

குதிரை வேகத்தில் செயல்படுகிறாா் தமிழக முதல்வா் அமைச்சா் பெ. மதன்ராஜா
இருசக்கர வாகனத்தை திருடிய தொழிலாளி கைது

தவெக வேட்பாளரை விலைக்கு வாங்கிதான் எடப்பாடி கே. பழனிசாமி வெற்றிபெற்றாா்
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


