திமுக நிர்வாகிகளுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!எடப்பாடி பழனிசாமி இன்று ஆளுநரைச் சந்திக்கிறார்? எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக பதவியேற்பார்! தம்பிதுரைபாபநாசம்: அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! பயணிகள் படுகாயம்! பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!தமிழகத்தில் ஒருசில இடங்களில் மே 13 வரை மழைக்கு வாய்ப்பு
/

சந்தனமரம் வெட்டிய இருவருக்கு ரூ. 60 ஆயிரம் அபராதம்

கல்வராயன்மலை பெரிஞ்சூர் கிராமத்தில் சந்தனமரம் வெட்டிய இருவருக்கு மாவட்ட வன அலுவலர் ஏ. பெரியசாமி மொத்தம் ரூ. 60 ஆயிரம் அபராதம் விதித்தார்.

Updated On :23 ஜனவரி 2019, 8:46 am IST

கல்வராயன்மலை பெரிஞ்சூர் கிராமத்தில் சந்தனமரம் வெட்டிய இருவருக்கு மாவட்ட வன அலுவலர் ஏ. பெரியசாமி மொத்தம் ரூ. 60 ஆயிரம் அபராதம் விதித்தார்.
கல்வராயன்மலைக் கிராமங்களான பெரிஞ்சூர் கிராமத்தில் மாவட்ட வன அலுவலர் ஏ. பெரியசாமி உத்தரவின்பேரில் கல்வராயன் வனச் சரகர் எஸ். ஞானராஜ், வனவர் ஜி. பாஸ்கர், வனக் காப்பாளர்கள் மற்றும் வனக் காவலர்கள் குழுவாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது கோயில் புறம்போக்கு இடத்தில் இருந்த சந்தனமரத்தை வெட்டி எடுத்து வந்த கருமந்துறையைச் சேர்ந்த ஆறுமுகம் (42), குப்பன் (55) ஆகிய இருவரையும்  பிடித்து வழக்குப் பதிவு செய்து மாவட்ட வன அலுவலரிடம் ஒப்படைத்தனர். இருவரையும் விசாரித்த மாவட்ட வன அலுவலர் ஏ.பெரியசாமி, சந்தனமரத்தை வெட்டிய இருவருக்கும் தலா ரூ. 30 ஆயிரம் வீதம் ரூ. 60 ஆயிரம் அபராதமாக விதித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.