சேலம் மாவட்டத்தில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் சரிபாதி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
புதிய ஓய்வூதிய திட்டத்தைக் கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாட்டைக் களைய வேண்டும், சிறப்பு காலமுறை ஊதியம் பெறுபவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். மேலும், 21 மாத நிலுவைத் தொகையை வழங்கிட வேண்டும், 3,500 தொடக்கப் பள்ளிகளை உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுடன் இணைக்கும் முடிவையும், 3,500 சத்துணவு மையங்களை மூடும் முடிவையும் ரத்து செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அமைப்பானது செவ்வாய்க்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் துவக்கியுள்ளது.
அதன்படி, சேலம் மாவட்டத்தில் சேலம் நகரம், மேட்டூர், சங்ககிரி, எடப்பாடி, ஆத்தூர், வாழப்பாடி, ஏற்காடு, கெங்கவல்லி உள்ளிட்ட வட்டாட்சியர் அலுவலகங்களின் முன் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு ஜாக்டோ-ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய்த் துறையினர் 60 சதவீதத்துக்கு மேலானவர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் பேசியதாவது:
நாங்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 2 ஆண்டுகளாகப் போராடி வருகிறோம்.
தற்போது கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இதன்மூலம் மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்கப்படும்.
எனவே, அரசு எங்களைஅழைத்துப் பேச வேண்டும். போராட்டத்தால் 95 சதவீத அரசு சார்ந்த பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன என்றார்.
இதைத் தொடர்ந்து, 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கம் எழுப்பப்பட்டது. பின்னர், சிறிது நேரத்தில் அனைவரும் கலைந்து சென்றனர். இந்தப் போராட்டம் காரணமாக வாரிசு சான்றிதழ், சாதிச் சான்றிதழ், பல்வேறு அரசு சார்ந்த சான்றிதழ்களைப் பெற முடியாமல் பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகினர். மேலும், ஜாக்டோ-ஜியோ சார்பில் புதன்கிழமை (ஜன.23) வட்டாட்சியர் அலுவலகங்கள் முன் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது.
இப் போராட்டம் காரணமாக அரசு அலுவலகங்களில் போதிய ஊழியர் இல்லாத நிலையும், பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இல்லாத நிலையும் ஏற்பட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில் குறைந்த அளவே ஆசிரியைகள் பணியாற்றக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அலுவலகங்களில் சொற்ப அளவிலான ஊழியர்கள் பணியாற்றினர்.
பள்ளிகள் பாதிக்கப்படாமல் இயங்க நடவடிக்கை:
இதுதொடர்பாக, ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் செய்தியாளர்களிடம் கூறியது:
அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் போராட்டத்தையடுத்து மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளிகளும் முறையாக இயங்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எந்த விதத்திலும் பள்ளி மாணவ, மாணவிகள் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆசிரியரே இல்லாத நிலையில். உள்ள பள்ளிகளில் சம்பந்தப்பட்ட சத்துணவு அமைப்பாளர்களைக் கொண்டு பள்ளிகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 180 கனஅடி

கோடை விடுமுறை: ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

பா்கூா் அருகே காா் கவிழ்ந்ததில் 2 வயது குழந்தை உயிரிழப்பு
ஊராட்சி செயலரை அரிவாளால் வெட்டிய வழக்கில் திமுக பிரமுகா் கைது
விடியோக்கள்

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை
