பாமக பேரவைக் குழு தலைவராக செளமியா அன்புமணி தேர்வு!கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல்தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக!
/

ஜன. 28-இல் தொகுதி 1 முதல்நிலை எழுத்து தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் தொடக்கம்

தொகுதி 1 முதல்நிலை எழுத்து தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் ஜன. 28-ஆம் தேதி தொடங்கப்பட

Updated On :24 ஜனவரி 2019, 4:47 am IST

தொகுதி 1 முதல்நிலை எழுத்து தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் ஜன. 28-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளதாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குநர் ஒ.செ.ஞானசேகரன் தெரிவித்தார்.
இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குநர் ஒ.செ.ஞானசேகரன் தெரிவித்தது: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டுள்ள தொகுதி 1 அடங்கிய முதல்நிலை எழுத்து தேர்வுக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜன. 31-ஆம் தேதி கடைசி நாளாகும். மேலும்,  இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
இத்தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் வரும் ஜன. 28-ஆம் தேதி காலை 10 மணியளவில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தொடங்கப்படவுள்ளன. இப்பயிற்சி வகுப்புகள் சிறந்த வல்லுநர்களைக் கொண்டு நடத்தப்பட உள்ளன. பாடக் குறிப்புகள் இலவசமாக வழங்குவதோடு, மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும். இப்பயிற்சியில் கலந்துகொள்ள விருப்பம் உள்ள மனுதாரர்கள் தங்களது புகைப்படம், விண்ணப்பித்த விவரங்களுடன் ஏற்காடு பிரதான சாலை, கோரி மேடு, சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு ஜன. 28-ஆம் தேதி  காலை 10 மணிக்கு வந்து பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.