மாற்றுத் திறனாளிகள் நலனுக்கான அரசு நலத் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு பிரசார பயணத்தை ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தார்.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான அரசு நலத் திட்டங்கள் குறித்து கலை நிகழ்ச்சிகள் மற்றும் தெருமுனை நாடகம் மூலம் நடைபெற்ற விழிப்புணர்வு பிரசார பயணம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
இதை ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் கொடியசைத்துத் துவக்கி வைத்துப் பேசியதாவது:
இந்த விழிப்புணர்வு பிரசார பயணத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியருக்கு ஆண்டுக்கு ரூ.1 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரை கல்வி உதவித்தொகை, பார்வையற்ற மாணவ, மாணவியருக்கு ஆண்டுக்கு ரூ.3 ஆயிரம் முதல் ரூ.6 ஆயிரம் வரையிலான வாசிப்பாளர் உதவித்தொகை, 40 சதவீதத்திற்கு மேல் பாதிக்கப்பட்ட மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.1 ஆயிரத்து 500 பராமரிப்பு உதவித்தொகை, 75 சதவீதத்திற்கு மேல் கடுமையான கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.1 ஆயிரத்து 500 பராமரிப்பு உதவித்தொகை, பார்வையற்றவரை திருமணம் செய்து கொள்ளும் நல்ல நிலையில் உள்ள நபருக்கு ரூ.25 ஆயிரம் மற்றும் 8 கிராம் தாலிக்கு தங்கம், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்டம் முழுவதும் சென்று வர இலவச பயணச் சலுகை உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களைப் பற்றி மாற்றுத்திறனாளிகளும், பொதுமக்களும் எளிதில் அறியும் வகையில் இந்த கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
இதன் மூலம் மாற்றுத்திறனாளிகளும், பொதுமக்களும் தங்களுக்கு அரசு செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து எளிதில் அறிய முடியும். மேலும், தெருமுனை நாடக நிகழ்வுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் தொடங்கி வைக்கப்பட்டு, சேலம் பழைய பேருந்து நிலையம், எடப்பாடி, ஓமலூர், சங்ககிரி, மேட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமையும், வாழப்பாடி, ஆத்தூர், கெங்கவல்லி, தலைவாசல் உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமையும் நடைபெறும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொழிற்சாலை உரிமையாளருக்கு கத்திக் குத்து: ஹரித்வாரில் இரண்டு சிறுவா்கள் கைது

இன்றைய மின்தடை: குறிச்சி






