ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

கருமந்துறையில் போலி பெண் மருத்துவர் கைது

கல்வராயன் மலை கருமந்துறையில் போலி பெண் மருத்துவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

Updated On :23 ஜனவரி 2019, 8:49 am IST

கல்வராயன் மலை கருமந்துறையில் போலி பெண் மருத்துவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் கல்வராயன் மலை கருமந்துறை பகுதியில்  முறையாக ஆங்கில மருத்துவம் படிக்காமல் சிலர், பொதுமக்களுக்கு சிகிச்சையளிப்பதாக மாவட்ட நிர்வாகத்துக்கு புகார்கள் சென்றுள்ளன.
இதையடுத்து, பெத்தநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் ஜெயசெல்வி தலைமையிலான மருத்துவக் குழுவினர், கல்வராயன்மலை கருமந்துறை பகுதியில் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனர்.
ஆய்வின்போது, செவிலியர் பட்டயப் படிப்பு படித்துள்ள உமா மகேஸ்வரி (35), கருமந்துறையில் ஆங்கில மருந்துகளைப் பயன்படுத்தி பொதுமக்களுக்கு அலோபதி சிகிச்சை அளிப்பது தெரியவந்தது. இதுகுறித்து மருத்துவ அலுவலர் ஜெயசெல்வி கருமந்துறை போலீஸில் புகார் செய்தார். புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த கருமந்துறை போலீஸார் போலி பெண் மருத்துவர் உமாமகேஸ்வரியை கைது செய்து விசாரித்து வருகின்றனர். பெத்தநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் மலைக் கிராமங்கள் உள்ளிட்ட கிராமங்களில், முறையாக மருத்துவர் பட்டம் பெறாமல் ஆங்கில மருந்துகளை பயன்படுத்தி அலோபதி சிகிச்சை அளிக்கும் போலி மருத்துவர்கள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென மருத்துவ அலுவலர் ஜெயசெல்வி தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.