சேலம் போஸ் மைதானத்தில் ரூ.3.9 கோடியில் அமைக்கப்பட்டு வரும் தற்காலிக பேருந்து நிலையக் கட்டுமானப் பணிகளை மாநகராட்சி ஆணையர் ரெ.சதீஷ் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் சேலம் பழைய பேருந்து நிலையத்தினை ரூ.92.13 கோடியில் ஈரடுக்கு பேருந்து நிலையமாக மாற்றியமைக்கும் பணிகளுக்கு முதல்வர் அண்மையில் அடிக்கல் நாட்டினார். அதனடிப்படையில், சேலம் பழைய பேருந்து நிலையம் ஈரடுக்கு பேருந்து நிலையமாக மாற்றியமைக்கப்பட உள்ளது.
இந்த நிலையில், ரூ.3.9 கோடியில் போஸ் மைதானத்தில் அமைக்கப்பட்டு வரும் தற்காலிக பேருந்து நிலையக் கட்டுமானப் பணிகளை மாநகராட்சி ஆணையர் ரெ.சதீஷ் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது, தற்காலிக பேருந்து நிலையத்துக்குள் குடிநீர் வசதி, கழிவறை வசதி, மின் விளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் பேருந்துகள் நிறுத்துவதற்கான நடை மேடைகள், கடைகள் அமைக்கும் பணிகளை உரிய காலத்துக்குள் முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு உடனடியாக கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு ஆணையர் உத்தரவிட்டார்.
ஆய்வின் போது, செயற்பொறியாளர்கள் அ.அசோகன், ஆர்.ரவி, ஜி.காமராஜ், மாநகர நல அலுவலர் மருத்துவர் கே.பார்த்திபன், உதவி ஆணையர் ஏ.ஆர்.ஏ.ஜெயராஜ், உதவி செயற்பொறியாளர் கே.செந்தில்குமார், சுகாதார ஆய்வாளர் எ.சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திரைக்கதிர்

சாம்பியன்ஸ் லீக் கொண்டாட்டத்தில் வெடித்த வன்முறை: 400 பேர் கைது! | Paris
விஜய்யே வீடு தேடிவந்து துணை முதல்வர் பதவியைக் கொடுத்திருப்பார்: பிரேமலதா
கோடை மழையே வா!
விடியோக்கள்

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK

திருக்கணிதப்படி குருபெயர்ச்சி பலன்கள்! June 1 நள்ளிரவு 2 மணி முதல் | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?


