சென்னையிலிருந்து வார இறுதியில் வெளியூர் செல்ல திட்டமா? மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! டாடா குழுமத் தலைவராக சந்திரசேகரன் தொடர்வார்! முடிவை மாற்றிய நிர்வாகக் குழு!இன்று கல்வி, நாளை வேறாக இருக்கலாம்! மனநிலையை மாற்ற தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை!நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!

விஜய்யே வீடு தேடிவந்து துணை முதல்வர் பதவியைக் கொடுத்திருப்பார்: பிரேமலதா

நான் ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் விஜய்யே வீடு தேடிவந்து துணை முதல்வர் பதவியைக் கொடுத்திருப்பார் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தது தொடர்பாக...

Premalatha Vijayakant

பிரேமலதா விஜயகாந்த் - (கோப்புப் படம்)

Published On :

தேமுதிகவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், நான் ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் விஜய்யே வீடு தேடிவந்து துணை முதல்வர் பதவியைக் கொடுத்திருப்பார் என்று பிரேமலதா விஜயகாந்த் ஞாயிற்றுக்கிழமை (மே 31) பேசியுள்ளார்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று முடிந்த பிறகு, தேமுதிகவின் முதல் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை, கோயம்பேட்டில் அந்தக் கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. அதில் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:

தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை, மேக்கேதாட்டு அணை, சட்டம் - ஒழுங்கு, மின்வெட்டு, விவசாயிகளுக்கான பயிர்க்கடன் தள்ளுபடியில் திருப்தி இல்லாததால் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் போன்ற பல்வேறு பிரச்னைகளை நம்மால் பட்டியலிட முடியும்.

பேரம் பேரம் என்று சொன்னீர்களே... இப்போது சொல்கிறேன்... எந்த பேரத்துக்கும் பதவிக்கும் அடிபணியாத ஒரே கட்சி தேமுதிகதான் என்பதை இந்தத் தேர்தலில் நிரூபித்து இருக்கிறோம். கட்சியை களங்கப்படுத்தியவர்களுக்கு இதுதான் பதில்

பதவிக்கோ, பணத்துக்கோ, பெட்டிக்கோ, சோபா செட்டுக்கோ எதற்கும் ஆசைப்படாமல் கூட்டணி கட்சிக்கு விசுவாசமாக, கிடைத்த ஒரு சீட் ஆனாலும், உண்மையாக இருக்கும் கட்சி தேமுதிக.

நாம் நினைத்திருந்தால் விஜய்யை சென்று பார்க்க முடியாதா? கட்சிக்காரர்கள் என்னுடன் வந்திருக்க மாட்டீர்களா?

எல்லாரும் அமைச்சர் பதவிக்கு ஓடினார்கள். அமைச்சர் என்ன? ஒரு வார்த்தை நான் சொல்லியிருந்தால் விஜய்யே வீடு தேடிவந்து துணை முதல்வர் பதவியையே கொடுத்திருப்பார். இதுதான் உண்மை. எனவே, ஒவ்வொரு காலக்கட்டத்திலும் கூட்டணி தர்மத்தை மதித்த கட்சிதான் தேமுதிக என்று தெரிவித்துள்ளார்.

Summary

Speaking on Sunday (May 31) at a meeting of the DMDK's district secretaries, Premalatha Vijayakant stated that had she uttered just a single word, Vijay himself would have come to her doorstep to offer the post of Deputy Chief Minister.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.