8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதா

தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

Premalatha Vijayakant

பிரேமலதா விஜயகாந்த் - (கோப்புப் படம்)

Published On :22 மே 2026, 8:26 pm IST

தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் போன்ற மாவட்டங்களில், பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக அதிக அளவில் மின்வெட்டு ஏற்பட்டிருப்பது மிகவும் வருத்தத்திற்குரிய விஷயமாகும். இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மின்வாரிய அலுவலகங்களை முற்றுகையிட்டு, மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது தீவிரத்தை வெளிப்படுத்துகிறது. கோடைக்காலத்தில் மின்சாரம் இல்லாமல் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். மேலும் வீடுகள், வணிக நிறுவனங்கள், மாணவர்கள், முதியோர் உள்ளிட்ட அனைவரும் கடும் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர்.

மக்கள் நம்பிக்கையுடன் வாக்களித்து தேர்ந்தெடுத்த அரசு, அந்த நம்பிக்கையையும் நிர்வாகத் திறனையும் வெளிப்படுத்தி, தமிழ்நாட்டில் மின்தடை இல்லாத நிலையை உருவாக்க அரசு உறுதியான செயல்திட்டங்களை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்கள் இனி மின்வெட்டு காரணமாக அவதிப்படாத வகையில் நிரந்தர தீர்வை ஏற்படுத்துவது அரசின் கடமையாகும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Summary

Premalatha urges immediate action to resolve frequent power outages in TN

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.