தொகுதி 1 முதல்நிலை எழுத்து தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் ஜன. 28-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளதாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குநர் ஒ.செ.ஞானசேகரன் தெரிவித்தார்.
இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குநர் ஒ.செ.ஞானசேகரன் தெரிவித்தது: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டுள்ள தொகுதி 1 அடங்கிய முதல்நிலை எழுத்து தேர்வுக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜன. 31-ஆம் தேதி கடைசி நாளாகும். மேலும், இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
இத்தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் வரும் ஜன. 28-ஆம் தேதி காலை 10 மணியளவில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தொடங்கப்படவுள்ளன. இப்பயிற்சி வகுப்புகள் சிறந்த வல்லுநர்களைக் கொண்டு நடத்தப்பட உள்ளன. பாடக் குறிப்புகள் இலவசமாக வழங்குவதோடு, மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும். இப்பயிற்சியில் கலந்துகொள்ள விருப்பம் உள்ள மனுதாரர்கள் தங்களது புகைப்படம், விண்ணப்பித்த விவரங்களுடன் ஏற்காடு பிரதான சாலை, கோரி மேடு, சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு ஜன. 28-ஆம் தேதி காலை 10 மணிக்கு வந்து பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்சி கிழக்கு செல்கிறார் விஜய்! இன்றைய செய்திகள் மே 30 - நேரலை!

பெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடை!
ஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!

நடிகர் ஜெயராம் காலில் விழுந்த தோனியின் மனைவி! ஏன்?
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


