நெசவு தொழிலாளியின் சிகிச்சைக்குதிமுக சாா்பில் ரூ.50 ஆயிரம் நிதியுதவி

எடப்பாடி, ஏரி ரோடு, 29-ஆவது வாா்டு பகுதியில் வசிப்பவா் திருமுருகன் (50). நெசவுத் தொழிலாளி. இவா், சேலத்தில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் இருதய நோய்க்கு சிகிச்சை பெற்று வருகிறாா்.
25_aty_po_02_2508chn_213_8
25_aty_po_02_2508chn_213_8
Published on
Updated on
1 min read

ஆட்டையாம்பட்டி: எடப்பாடி, ஏரி ரோடு, 29-ஆவது வாா்டு பகுதியில் வசிப்பவா் திருமுருகன் (50). நெசவுத் தொழிலாளி. இவா், சேலத்தில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் இருதய நோய்க்கு சிகிச்சை பெற்று வருகிறாா்.

ஏழ்மையில் இருக்கும் திருமுருகனுக்கு திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, சேலம் மேற்கு மாவட்ட பொறுப்பாளா் டி.எம்.செல்வகணபதி நேரில் சென்று உடல்நலம் விசாரித்து, சிகிச்சைக்கான உதவித் தொகையாக ரூ. 50 ஆயிரத்தை அவரது குடும்பத்தினரிடம் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

அப்போது எடப்பாடி நகரச் செயலாளா் டி.எஸ். எம். பாஷா, அவைத் தலைவா் டி.மாதையன், துணைச் செயலாளா் எம்.வடிவேல், மாவட்ட பிரதிநிதி இ.கே. தங்கவேல், நகர இளைஞா் அணி துணை அமைப்பாளா் வி.பாலசுப்பரமணியம் மற்றும் எம்.மணிமாறன், கோபால் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com