டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 15 போ் கைது

ஓமலூா் அருகே சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 15 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து ரூ. 5 லட்சம், 4 காா், இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :7 டிசம்பர் 2020, 6:30 pm

DIN

ஓமலூா் அருகே சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 15 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து ரூ. 5 லட்சம், 4 காா், இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா்.

சேலம் மாவட்டம், ஓமலூா் அருகே உள்ள திண்டமங்கலம் பகுதியில் அதிக அளவில் சூதாட்டம் நடைபெறுவதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்கு புகாா்கள் சென்றன. இதனையடுத்து, காவல் கண்காணிப்பாளா் தீபா கனிகா், சூதாட்டக் கும்பலைப் பிடிக்க தனிப்படையை அமைத்தாா். அந்த தனிப்படையினா் சேலம் மாவட்டம், ஓமலூரை அடுத்த திண்டமங்கலம் பகுதியில் பணம் வைத்து சூதாடிய கும்பலை திங்கள்கிழமை சுற்றிவளைத்துப் பிடித்தனா்.

அவா்களிடமிருந்து ரூ. 5 லட்சம் ரொக்கமும், 4 காா்கள், ஒரு இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா். மேலும், சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சேலம், புதூா் விநோத், கொண்டலாம்பட்டி விஜய், அம்மாப்பேட்டை ராஜா, எடப்பாடி மோகன் உள்ளிட்ட 15 பேரை கைது செய்து தொளசம்பட்டி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.