தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

வீரகனூர் பகுதியில் கோழிக் கழிவுகளால் நோய் பரவும் அபாயம்: பொதுமக்கள் கோரிக்கை

வீரகனூர் பகுதியில் கோழிக் கழிவுகளால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

News image

வீரகனூர் பகுதியில் சாலையோரத்தில் கொட்டப்பட்டுள்ள கோழி கழிவுகள்.

Updated On :7 டிசம்பர் 2020, 9:03 am

DIN

சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே  வீரகனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட வீரகனூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து சொக்கனூர் செல்லும் வழியில் இருபுறமும் கோழிக் கழிவுகளை அப்பகுதியில் கோழிக் கடை நடத்தி வருபவர்கள் சிலர் தினந்தோறும் அப்பகுதி முழுவதிலும் கொட்டி அசுத்தம் செய்து வருகின்றனர். 
கொட்டப்படும் பகுதியானது சுடுகாடு மற்றும் இடுகாடு பகுதியாகும். இப்பகுதியில் தான் இறந்தவர்களின் இறுதிச்சடங்குகள் மற்றும் வருடாந்திர திதி, தர்ப்பணம் செய்து வருகின்றனர். அங்கே அருகில் பலநூறு வருடங்களாக மக்களுக்கு நிழல் தரக்கூடிய பழமைவாய்ந்த அரச மரமானது உள்ளது. 

Story image

இப்பகுதியில் உள்ளவர்கள் மதிய நேரங்களில் இங்கு நிழலுக்காக பலபேர் வந்து ஓய்வு எடுத்து செல்கின்றனர். இந்த வழியில்தான் சுவேத நதியின் அணை கட்டானது இருக்கிறது. இப்பகுதியின் வழியாக செல்பவர்கள், கோழிக்கழிவுகளை  முகச்சுளிப்புடன் பார்த்து செல்கின்றனர். இப்பகுதியில்  கோழி கழிவுகள் கொட்டி அதனை குழியில்  கூட மூடாமல் அப்படியே விட்டுச் செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் நாய்கள் கூட்டம் கூட்டமாக வந்து அதனைத் தோண்டி அசுத்தம் செய்கின்றது. 

Story image

தற்போது மழைக்காலம் என்பதால் அப்பகுதியில் துர்நாற்றம் ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே வீரகனூர் பேரூராட்சி நிர்வாகம் கழிவுகளை கொட்டுபவர்களிடம் அறிவுரை வழங்கி, கழிவுகள் கொட்டப்பட்ட இடத்தை சுத்தம் செய்து, அந்த இடத்தில் பசுமை சார்ந்த மரம் நட வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.