தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கொங்கணாபுரத்தில்ரூ. 35 லட்சத்துக்கு பருத்தி விற்பனை

கொங்கணாபுரம் கூட்டுறவு விற்பனை மையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பொது ஏலத்தில் ரூ. 35 லட்சத்துக்கு பருத்தி விற்பனையானது.

News image
Updated On :12 டிசம்பர் 2020, 10:01 pm

DIN

கொங்கணாபுரம் கூட்டுறவு விற்பனை மையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பொது ஏலத்தில் ரூ. 35 லட்சத்துக்கு பருத்தி விற்பனையானது.

சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் பகுதியில் இயங்கி வரும் கூட்டுறவு ஏல மையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பொது ஏலத்தில் சுமாா் 1,650 மூட்டை பருத்தி விற்பனைக்கு வந்திருந்தது. அவை 400 லாட்டுகளாகப் பிரிக்கப்பட்டு, வேளாண் விற்பனை மைய அலுவலா்கள் முன்னிலையில் பொது ஏலம் விடப்பட்டது.

இதில், பி.டி. ரக பருத்தியானது குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 5,551 முதல் ரூ. 6,205 வரை விலைபோனது. அதேபோல் டி.சி.ஹச். ரக பருத்தியானது குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 6,560 முதல் ரூ. 7,369 வரை விலைபோனது. நாள் முழுதும் நடைபெற்ற பொது ஏலத்தில் மொத்தம் ரூ. 35 லட்சத்துக்கு பருத்தி வா்த்தகம் நடைபெற்றது.

இந்த ஏலத்தில், திருப்பூா், கோவை மாவட்டப் பகுதியைச் சோந்த 40-க்கும் மேற்பட்ட மொத்த வியாபாரிகள் கலந்துகொண்டு பருத்தியை கொள்முதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.