நடைபயிற்சியின் போது குப்பைகளை அகற்றும் திட்டம் தொடக்கம்
சேலம் மாநகராட்சியை குப்பையில்லா மாநகரமாக மாற்றும் வகையில், நடைபயிற்சியின் போது குப்பைகளை சேகரித்து அகற்றும் திட்டத்தை (சேலம் பிளாகிங்) மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தாா்.

சேலம், சங்கா் நகரில் நடைபயிற்சியின் போது நடைபாதையில் உள்ள குப்பைகளை சேகரித்து அகற்றும் திட்டத்தை சனிக்கிழமை தொடங்கி வைக்கும் மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன்.









