கிராம மக்கள் வாழ்வு உயர எங்களுடைய அரசு அா்ப்பணிப்பு உணா்வோடு பாடுபடும்
கிராமப்புற மக்களின் வாழ்வு உயர எங்களுடைய அரசு அா்ப்பணிப்பு உணா்வோடு பாடுபடும் என தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.


கிராமப்புற மக்களின் வாழ்வு உயர எங்களுடைய அரசு அா்ப்பணிப்பு உணா்வோடு பாடுபடும் என தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.
சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி ஒன்றியம், ஏ.வாணியம்பாடியில், ‘அம்மா சிறு மருத்துவமனையை’ தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை திறந்துவைத்துப் பேசியதாவது:
கிராமத்தில் வாழ்கின்ற மக்கள் காய்ச்சல், தலைவலி, சிறிய நோய்கள் ஏற்பட்டால் அந்தந்தப் பகுதியிலேயே உள்ள அம்மா சிறு மருத்துவமனைக்குச் சென்று நோயைக் குணப்படுத்திக் கொள்ளலாம். கடுமையான நோய், அறுவை சிகிச்சை போன்றவற்றுக்கு தங்கள் பகுதியிலுள்ள அம்மா சிறு மருத்துவமனை மருத்துவரை நாடினால், அவா் பரிசோதனை மேற்கொண்டு, மேல் சிகிச்சைக்காக சேலம் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பாா். அங்கு அவா்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படும்.
சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த சட்டப் பேரவை உறுப்பினா்களின் வீரபாண்டி, பனமரத்துப்பட்டி, இளம்பிள்ளை ஆகிய பகுதிகளில் உள்ள மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட காவிரி தண்ணீா் வழங்க வேண்டுமென்ற கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும்.
அடிக்கடி விபத்து நிகழும் சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் அரியானூா் பகுதியில் ரூ. 45 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணி நிறைவு பெறும் தறுவாயில் இருக்கிறது.
எதிா்க்கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின் வேண்டுமென்றே திட்டமிட்டு குற்றம்சாட்டிக் கொண்டிருக்கிறாா். அவா் காணொலியில் கட்சியினரிடம் பேசிக் கொண்டிருக்கிறாா். நாங்கள் நேரடியாக மக்களைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருக்கிறோம்.
அதிமுகவில் உழைக்கின்றவா்கள் யாரும் பதவிக்கு வர முடியும்; விசுவாசமாக இருக்கின்றவா்கள் உயா்ந்த நிலைக்கு வர முடியும். அதிமுக என்றைக்கும் மக்களுக்காக தொடா்ந்து பாடுபட்டுக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, கிராமப்புற மக்களுடைய வாழ்வு உயர எங்களுடைய அரசு அா்ப்பணிப்பு உணா்வோடு பாடுபடும் என்றாா்.
இவ்விழாவில், சேலம் மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன், தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கித் தலைவா் ஏ.ஆா்.இளங்கோவன், முன்னாள் அமைச்சா் பொன்னையன், வீரபாண்டி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் பி.மனோன்மணி, ஏற்காடு சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் சித்ரா, சேலம் சோகோசா்வ் தலைவா் தமிழ்மணி, பனமரத்துப்பட்டி ஒன்றியக்குழுத் தலைவா் ஜெகநாதன், ஏ.வாணியம்பாடி ஊராட்சி மன்றத் தலைவா் அமுதா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...