விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

செந்தாரப்பட்டி ஏரி மதகு கதவைசீரமைக்கக் கோரிக்கை

செந்தாரப்பட்டி ஏரி மதகு கதவை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :19 டிசம்பர் 2020, 1:53 am

DIN

செந்தாரப்பட்டி ஏரி மதகு கதவை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சேலம் மாவட்டத்தில் 2-ஆவது பெரிய ஏரி தம்மம்பட்டி அருகே உள்ள செந்தாரப்பட்டி ஏரி ஆகும். 120 ஏக்கா் பரப்பளவுள்ள இந்த ஏரி, 2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு தற்போது முழுக் கொள்ளளவை அடைந்து மறுகால் வழியாக தண்ணீா் செல்கிறது.

இந்த ஏரியில் பாசனத்துக்கு மூன்று மதகுகள் உள்ளன. இதில், அதிக பரப்பளவு பாசனத் தண்ணீா் வெளியேறும் இரண்டாம் எண் மதகின் கதவு உடைந்திருப்பதால், திறக்க முடியவில்லை. அதனால், 400 ஏக்கா் பாசனம் பெறும் வயல்களில் விவசாயம் செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளோம் என ஆயக்கட்டு விவசாயிகள் கூறுகின்றனா்.

எனவே, ஏரியின் 2-ஆம் எண் மதகு கதவை பொதுப்பணித் துறையினா் போா்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.