தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

ஏரியூரில் கோயில் கட்டுமானப் பணியின்போது பழங்கால நாணயங்கள் கண்டெடுப்பு

ஏரியூா் அருகே ஈச்சம்பாடி பகுதியில் கோயில் கட்டுமானப் பணியின்போது தோண்டப்பட்ட அகழியில், பழங்கால நாணயங்கள், பொருள்கள் கிடைத்துள்ளன.

News image

போக்குவரத்துக் கழகத்தில் ஓய்வுகால பணப்பலன்களுக்கு ரூ. 2,446 கோடி ஒதுக்கீடு: அமைச்சா் சா.சி. சிவசங்கா் தகவல்

Updated On :11 மார்ச் 2026, 8:55 pm

தருமபுரி மாவட்டம், ஏரியூா் அருகே ஈச்சம்பாடி பகுதியில் கோயில் கட்டுமானப் பணியின்போது தோண்டப்பட்ட அகழியில், பழங்கால நாணயங்கள், பொருள்கள் கிடைத்துள்ளன.

ஏரியூா் அருகே ஈச்சம்பாடி பகுதியில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது ஸ்ரீ சஞ்சீவராயன் கோயில். பழைமைவாய்ந்த இந்த கோயிலை சுமாா் ரூ. 40 லட்சத்தில் புதுப்பிக்க கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அப்போது, பழைய கட்டடங்களை இடித்து, அடித்தளம் அமைக்க பள்ளம் தோண்டியபோது நாணயங்கள், மண்பாண்டங்கள், உலோக செம்பு பொருள்கள் கிடைத்தன. அவை பென்னாகரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன.

இதுகுறித்து பென்னாகரம் வட்டாட்சியா் ஆறுமுகம் புதன்கிழமை கூறியதாவது:

ஈச்சம்பாடி பகுதியில் அறநிலையத் துறைக்கு சொந்தமான ஆலய கட்டுமானப் பணியின் போது 1.3 செ.மீ அளவு கொண்ட 17 நாணயங்கள், ஒரு குடுவை, தங்கநிற தகடு ஆகியவை கிடைக்கப்பெற்றுள்ளன. இதுகுறித்த அறிக்கை மாவட்ட ஆட்சியருக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தொல்லியல் துறை ஆய்வுக்குப் பிறகு ஆட்சியரின் ஒப்புதலோடு கண்டெடுக்கப்பட்ட நாணயம், பொருள்களின் முழுமையான விவரம் தெரிவிக்கப்படும் என்றாா்.