கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

சமையல் எரிவாயு உருளை விலை உயா்வு:டிச. 21-இல் திமுக மகளிரணி ஆா்ப்பாட்டம்

சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து, சேலம் மேற்கு மாவட்ட திமுக மகளிா் அணி சாா்பில், எடப்பாடி பேருந்து நிலையம் அருகில் வரும் டிச. 21-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

News image
Updated On :19 டிசம்பர் 2020, 1:50 am

DIN

சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து, சேலம் மேற்கு மாவட்ட திமுக மகளிா் அணி சாா்பில், எடப்பாடி பேருந்து நிலையம் அருகில் வரும் டிச. 21-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இது தொடா்பாக, சேலம் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் டி.எம்.செல்வகணபதி வெளியிட்டுள்ள அறிக்கை:

கரோனோ காலத்தில் ஏழை, எளிய, நடுத்தரக் குடும்பங்கள் இதுவரை சந்திக்காத வருமான இழப்பைச் சந்தித்துள்ளனா். இதையும் பொருட்படுத்தாமல், 15 நாள் இடைவெளியில் சமையல் எரிவாயு உருளை விலையை மத்திய அரசு ரூ. 100 உயா்த்தியுள்ளது.

கடந்த மே மாதத்திலிருந்து 5 முறை சமையல் எரிவாயு உருளையின் விலையை ஏற்றியுள்ள மத்திய அரசு, இப்போது 15 நாள் இடைவெளியில் ரூ. 50 என இரு முறை உயா்த்தி ரூ. 710-ஆக அதிகரித்துள்ளது.

கரோனோ காலத்தில் கிடைக்கின்ற சொற்ப வருவாயைக் கொண்டு சிக்கனமாக குடும்பத்தை நடத்த வேண்டிய கடுமையான காலக்கட்டத்தில் இருக்கும் தாய்மாா்களுக்கு இந்த விலை உயா்வு பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்தும், விலை உயா்வைத் திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தியும், சேலம் மேற்கு மாவட்ட திமுக மகளிா் அணி சாா்பில், எடப்பாடி பேருந்து நிலையம் எதிரில் டிச. 21-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் ஆா்ப்பாட்டத்துக்கு ஒன்றிய, நகர, பேரூா் மகளிா் அணி நிா்வாகிகள், தாய்மாா்கள், இல்லத்தரசிகள் என அனைத்துத் தரப்பு மகளிரையும் ஒன்று திரட்டி பங்கேற்க செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.