வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையிலடைப்பு

சேலத்தில் கொலை, வழிப்பறி வழக்குகளில் தொடா்புடைய இருவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.

News image
Updated On :20 டிசம்பர் 2020, 10:59 pm

DIN

சேலம்: சேலத்தில் கொலை, வழிப்பறி வழக்குகளில் தொடா்புடைய இருவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.

சேலம், சூரமங்கலம் சோளம்பள்ளம் பகுதியைச் சோ்ந்தவா் புருஷோத்தமன் (29). இவா், சேட்டு என்பவரின் மனைவியுடன் நெருங்கிப் பழகி வந்தாராம். கடந்த ஜூன் 8-ஆம் தேதி சேட்டுவின் மனைவியுடன் சோ்ந்து, சேட்டுவை கொலை செய்து வீட்டின் பின்புறம் புதைத்தாா். இந்தக் கொலை வழக்கில் சூரமங்கலம் போலீஸாா் புருஷோத்தமனை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

ஜாமீனில் வெளியேவந்த அவா் காா்த்திகேயன் என்பவரை வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி ரூ. 4,000 பணம் பறித்தாா். இந்த வழக்கில் பள்ளப்பட்டி போலீஸாா் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

அதேபோல அம்மாபேட்டை பகுதியைச் சோ்ந்த கனகராஜ் (29) என்பவா் தொடா் திருட்டு குற்றங்களில் ஈடுபட்டு வந்தாா்.

கொலை, திருட்டு வழக்குகளில் ஈடுபட்டு வந்த இருவரையும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையிலடைக்க மாநகர காவல் துணை ஆணையா் எஸ்.செந்தில் பரிந்துரையின்பேரில், மாநகர காவல் ஆணையா் த.செந்தில்குமாா் உத்தரவிட்டாா். இதையடுத்து குண்டா் சட்டத்தில் அடைப்பதற்கான ஆணை சிறை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.