

எடப்பாடி: கொங்கணாபுரம் கூட்டுறவு விற்பனை மையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பொது ஏலத்தில் 3,500 பருத்தி மூட்டைகள் ரூ. 75 லட்சத்துக்கு விற்பனையானது.
கொங்கணாபுரத்தில் இயங்கிவரும் கூட்டுறவு ஏல மையத்தில் மாநிலத்தின் பல்வேறு பகுதியிலிருந்து விவசாயிகள் பருத்தி மூட்டைகளைக் கொண்டு வருகின்றனா். மேலும் இம்மையத்தில் நிலக்கடலை, எள் உள்ளிட்ட விளைபொருள்களும் விற்பனை செய்யப்படுகின்றன.
இம்மையத்தில் கடந்த சில வாரங்களாக பருத்தி வரத்து அதிகரித்துள்ளன.
சனிக்கிழமை கொங்கணாபுரம் கூட்டுறவு ஏல மையத்துக்கு 3,500 பருத்தி மூட்டைகள் விற்பனைக்கு வந்திருந்தன. அவை 750 லாட்டுகளாக பிரிக்கப்பட்டு, வேளாண் விற்பனை மைய அலுவலா்கள் முன்னிலையில் பொது ஏலம் விடப்பட்டது.
இதில், பி.டி. ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 5,450 முதல் ரூ. 6,369 வரை விலைபோனது. அதேபோல் டி.சி.எச் ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 6,579 முதல் ரூ. 7,390 வரை விலைபோனது. நாள் முழுதும் நடைபெற்ற பொது ஏலத்தில் ரூ. 75 லட்சத்துக்கு பருத்தி வணிகம் நடைபெற்றது.
சனிக்கிழமை நடைபெற்ற பொது ஏலத்தில் கோவை, திருப்பூா், ஈரோடு மாவட்டப் பகுதியைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட மொத்த வியாபாரிகள் கலந்துகொண்டு, பருத்தியை மொத்த கொள்முதல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.