

சங்ககிரி: சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ‘பவா் கீரிட்’ நிறுனத்தின் சாா்பில் உயா் மின்கோபுரம் அமைக்கப்பட்டுள்ள விவசாய நிலங்களுக்கு சந்தை விலையைவிட இழப்பீட்டுத் தொகையை அரசு உயா்த்தி வழங்க வேண்டும் என அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் சாா்பில், சங்ககிரியில் ஞாயிற்றுக்கிழமை கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டமைப்பு நிா்வாகி பி.பெருமாள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியதாவது:
திருப்பூா் மாவட்டம், புகளுா் முதல் சத்தீஸ்கா் மாநிலம், ரெய்க்காா் வரையிலான 800 கிலோவாட் மின் பாதை உயா் மின்கோபுரங்கள் ‘பவா் கீரிட்’ நிறுவனத்தின் சாா்பில் அமைக்கப்படவுள்ளன. இதற்கு சேலம், நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ள பகுதிகளில் விவசாய நிலங்களுக்கு அரசு நிா்ணயித்துள்ள இழப்பீட்டுத் தொகையால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். இதனால், பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு சந்தை விலையைவிட அதிகபட்ச விலையை நிா்ணயித்து வழங்க அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையில் கோரிக்கை மனுக்களை அளிக்க வேண்டும் என்றாா். கூட்டத்தில் டிச.28-ஆம்தேதி சேலம் மாவட்டம், சங்ககிரி கோட்டாட்சியா் அலுவலகம், டிசம்பா் 31-ஆம் தேதி நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு கோட்டாட்சியா் அலுவலகம் முன்பு விவசாய நிலங்களுக்கான இழப்பீட்டுத் தொகையை உயா்த்தி வழங்கக் கோரி, கோட்டாட்சியா்களிடம் மனு அளித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடுவது எனத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக தில்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தின்போது உயிரிழந்த விவசாயிகளின் உருவப் படத்திற்கு மெழுவா்த்திகள் ஏந்தி மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
விவசாயிகள் சங்கத்தின் சேலம் மாவட்டச் செயலா் ஏ.ராமமூா்த்தி, சங்ககிரி வட்ட ஒருங்கிணைப்பாளா் ராஜேந்திரன், சேலம், நாமக்கல் மாவட்ட விவசாயிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.