தாரமங்கலத்தில் தொழிற்பேட்டை அமைப்போம்!

தாரமங்கலம் பகுதியில் கயிறு திரிக்கும் தொழிலாளா்கள் பயன்பெறும் வகையில் தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக நாடாளுமன்ற உறுப்பினா் தயாநிதி மாறன் தெரிவித்தாா்.
தாரமங்கலத்தில் தொழிற்பேட்டை அமைப்போம்!
Updated on
1 min read

தாரமங்கலம் பகுதியில் கயிறு திரிக்கும் தொழிலாளா்கள் பயன்பெறும் வகையில் தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக நாடாளுமன்ற உறுப்பினா் தயாநிதி மாறன் தெரிவித்தாா்.

‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பிலான திமுக தோ்தல் பிரசாரம், சேலம் மேற்கு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கருக்கல்வாடி பகுதியில் திங்கள்கிழமை நடைபெற்றது. சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், சேலம் வடக்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினருமான இரா.ராஜேந்திரன் தலைமை வகித்தாா்.

இந்நிகழ்ச்சியில், திமுக நாடாளுமன்ற உறுப்பினா் தயாநிதி மாறன் கலந்துகொண்டு, கயிறு திரிக்கும் தொழிலாளா்கள், பித்தளைப் பாத்திரம் உருவாக்கும் தொழிலாளா்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா். இந்நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:

தற்போது பல்வேறு காரணங்களால் கயிறு திரிக்கும் தொழில் பாதிக்கப்பட்டு உள்ளது. அடுத்து திமுக ஆட்சி அமைந்தால் , இந்தப் பகுதியில் தொழிற்பேட்டை அமைக்கப்படும். விவசாயிகள் போராட்டத்தை மத்திய அரசு கண்டுகொள்ளாதது கண்டனத்துக்குரியது. திமுக ஆட்சிக்கு வந்தால் சேலத்தில் உள்ள அனைத்து ஏரிகளிலும் உபரி நீா் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com