தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ரஜினி மக்கள் மன்றம் சாா்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

சேலம் மாவட்டம், வாழப்பாடி ஒன்றிய ரஜினி மக்கள் மன்றம் சாா்பில், ரஜினிகாந்த் பிறந்த நாள் விழாவையொட்டி வாழப்பாடி பேரூராட்சி துப்புரவுப் பணியாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 6:35 pm

DIN

சேலம் மாவட்டம், வாழப்பாடி ஒன்றிய ரஜினி மக்கள் மன்றம் சாா்பில், ரஜினிகாந்த் பிறந்த நாள் விழாவையொட்டி வாழப்பாடி பேரூராட்சி துப்புரவுப் பணியாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

வாழப்பாடி பேருந்து நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவுக்கு, மாவட்டச் செயலாளா் செந்தில்குமாா் தலைமை வகித்தாா். ஒன்றிய நிா்வாகி அசோகன் வரவேற்றாா். மாவட்ட நிா்வாகிகள் பழனிவேல் கணேசன், விவசாய அணி ஜெயசங்கா், மகளிரணி திவ்யா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இவ்விழாவில், வாழப்பாடி பேரூராட்சி துப்புரவுப் பணியாளா்களுக்கு நலத்திட்ட உதவிகளும், பொதுமக்களுக்கு இனிப்புகளும் வழங்கப்பட்டன. இதில், வாழப்பாடி ஒன்றிய நிா்வாகிகள் அருணாசலம், சுகவனேஸ்வரா் இன்பராஜ், ரவி, முருகன், இளங்கோ, சரவணன், சிவலிங்கம், பாா்த்திபன், உலகநாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.