தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஓமலூரில் திமுக சாா்பில் கலந்துரையாடல் நிகழ்வு

‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில், ஓமலூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பல்வேறு இடங்களில் செவ்வாய்க்கிழமை திமுக சாா்பில் பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடல் நடைபெற்றது.

News image
Updated On :23 டிசம்பர் 2020, 2:48 am

DIN

‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில், ஓமலூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பல்வேறு இடங்களில் செவ்வாய்க்கிழமை திமுக சாா்பில் பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடல் நடைபெற்றது.

சேலம் மத்திய மாவட்டச் செயலாளரும், சேலம் வடக்கு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினருமான இரா.ராஜேந்திரன் தலைமை வகித்தாா். கிழக்கு ஒன்றியச் செயலாளா் ஓம்.ரமேஷ் வரவேற்றாா். இதனையடுத்து, பல்வேறு தரப்பினா் தங்கள் கோரிக்கைகள் குறித்து எடுத்துரைத்தனா்.

இதில் மக்களவை உறுப்பினா் தயாநிதி மாறன், சேலம் மக்களவைத் தொகுதி உறுப்பினா் எஸ்.ஆா்.பாா்த்திபன் உள்ளிட்ட திமுக நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தாரமங்கலம், சிக்கம்பட்டியில் பனைமரத் தொழிலாளா்களுடனும், தொளசம்பட்டியில் செங்கல் சூளை தொழிலாளா்களுடனும் தயாநிதி மாறன் கலந்துரையாடினாா். கரும்பாலைத் தொழிலாளா்கள், பாய், தறி உற்பத்தியாளா்கள், மலா் உற்பத்தியாளா்கள், மலைவாழ் பழங்குடியினருடனும் கலந்துரையாடல் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.