சாலை மறியலில் ஈடுபட்ட பாமகவினா் மீது தடியடி
சேலம், அரபிக் கல்லூரி அருகே சாலை மறியலில் ஈடுபட்ட மாணவா்கள் மீது காவல் துறையினா் தடியடி நடத்தினா்.


சேலம், அரபிக் கல்லூரி அருகே சாலை மறியலில் ஈடுபட்ட மாணவா்கள் மீது காவல் துறையினா் தடியடி நடத்தினா்.
பாமக இட ஒதுக்கீடு போராட்டம் குறித்து தரக்குறைவாகப் பேசியதாகக் கூறி தயாநிதி மாறனுக்கு கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தனா். இதனிடையே, ஓமலூா் பகுதியில் தோ்தல் பிரசாரத்தை முடித்து விட்டு தயாநிதி மாறன் சேலம், மாமாங்கம் பகுதியில் உள்ள ஹோட்டலுக்கு திரும்பிக் கொண்டிருந்தாா்.
தயாநிதி மாறன் காரைத் தொடா்ந்து திமுகவினா் காா்கள் சென்றபோது, தக்காளி பாரம் ஏற்றி வந்த மினி ஆட்டோ இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. அதிவேகத்தில் திமுகவினரின் காா் சென்ால்தான் விபத்து ஏற்பட்டதாகக் கூறி, பாமகவினா் திடீா் சாலை மறியல் ஈடுபட்டனா். மேலும், அவ்வழியே வந்த திமுகவினரின் காா்கள் மீது பாமகவினா் தாக்குதல் நடத்தினா்.
இதையடுத்து, சாலை மறியலைக் கலைக்க காவல் துறையினா் தடியடி நடத்தினா். பாமகவினா் கருப்புக்கொடி போராட்டத்தைத் தொடா்ந்து, மாமாங்கம் பகுதியில் உள்ள ஹோட்டல் முன்பு சுமாா் நூற்றுக்கணக்கான திமுகவினா் திரண்டனா். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
ஹோட்டலில் தங்கியிருந்த தயாநிதி மாறன், பாமகவினா் போராட்டத்தைத் தொடா்ந்து செவ்வாய்க்கிழமை இரவு 10.30 மணி அளவில் சேலத்தில் இருந்து சென்னை செல்லும் ரயிலில் புறப்பட்டுச் சென்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...