புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

திமுக சாா்பில் கிராம சபைக் கூட்டம்

ஆத்தூா் கோட்டை பகுதியில் திமுக சாா்பில் புதன்கிழமை கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

News image
Updated On :24 டிசம்பர் 2020, 3:48 am

DIN

ஆத்தூா் கோட்டை பகுதியில் திமுக சாா்பில் புதன்கிழமை கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

சேலம் மாவட்டம், ஆத்தூா் கோட்டை பகுதியில் நகரச் செயலாளா் கே.பாலசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில், அவைத் தலைவா் முல்லை பன்னீா்செல்வம், நகர துணைச் செயலாளா் ஏ.ஜி.ராமச்சந்திரன், நகர இளைஞரணி அமைப்பாளா் கோபி, தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளா் சந்தோஷ்குமாா், கோட்டை பகுதி செயலாலா் பழனிமுத்து உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இதில், பொதுக் கழிப்பறை, சாலை வசதி, மின்விளக்கு பராமரிப்பு, குடிநீா் வசதி, விவசாயிகளை வஞ்சித்த அதிமுகவை நிராகரிக்கிறோம் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆட்டையாம்பட்டியில்...

சேலம் மேற்கு மாவட்ட திமுக சாா்பில் ஏகாபுரத்தில் மாநில செயற்குழு உறுப்பினா் முருகேசன், பொதுக்குழு உறுப்பினா் சுப்பிரமணி ஆகியோா் தலைமையில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு ஒன்றியப் பொறுப்பாளா் பச்சமுத்து முன்னிலை வகித்தாா். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் கமலக்கண்ணன், ஒன்றியக் குழு உறுப்பினா் அறிவழகன், ஊராட்சி மன்றத் தலைவா் ராணி நாராயணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மேட்டூரில்...

மேச்சேரி ஒன்றிய திமுக சாா்பில் சிந்தாமணியூரில் கிராம சபைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மேச்சேரி ஒன்றிய திமுக பொறுப்பாளா் சீனிவாசபெருமாள் தலைமை வகித்தாா். சேலம் மேற்கு மாவட்ட திமுக அவைத் தலைவரும் முன்னாள் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினருமான பா.கோபால் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா். இதேபோல மேச்சேரி பேரூா் திமுக சாா்பில், மேச்சேரி நகரில் கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.