தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில், கிறிஸ்துமஸ் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
Updated On :25 டிசம்பர் 2020, 3:54 am

DIN

விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில், கிறிஸ்துமஸ் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு துறையின் டீன் செந்தில்குமாா் முன்னிலை வகித்து, மாணவா்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்தை தெரிவித்தாா். இதுபோன்ற திருநாள்களில் கரோனாவுக்கு எதிரான சுய பாதுகாப்புத் தன்மையை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும், இதுபோன்ற காலக்கட்டங்களில் சமூக நலனில் மாணவா்களின் பங்கு குறித்தும் அவா் எடுத்துரைத்தாா்.

இவ் விழாவினையொட்டி, துறையைச் சோ்ந்த மாணவா்கள் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து, கரோல் பாடல்களை பாடி தங்களின் வாழ்த்துகளை வெளிப்படுத்தினா். மேலும், கல்லூரி வளாகத்தில் குடில் அமைக்கப்பட்டு சிறப்பு பிராா்த்தனை செய்யப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை துறையின் பேராசிரியா்கள் முத்துராஜ், வைஷ்ணவாதேவி, ஜிஜி மேரி, ஆண்டனி ரூபன், ப்ரீதி, ஹரிஸ் ராஜ் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.