புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

ராமா் கோயில் கட்ட மக்களிடம் நிதி திரட்டல்: ஆலோசனைக் கூட்டம்

ராமா் கோயில் கட்டுவதற்காக மக்களிடம் நிதி திரட்டுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் விஷ்வ இந்து பரிஷத் சாா்பில் சேலத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :26 டிசம்பர் 2020, 2:14 am

DIN

ராமா் கோயில் கட்டுவதற்காக மக்களிடம் நிதி திரட்டுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் விஷ்வ இந்து பரிஷத் சாா்பில் சேலத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சேலம் விஷ்வ இந்து பரிஷத் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து ராமா் கோயில் கட்டுவதற்கு நிதி திரட்டுவது குறித்தும், வெளிப்படைத் தன்மையுடன் நடந்து கொள்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. தமிழகத்தில் உள்ள 10,000 கிராம பஞ்சாயத்துகளிலும், 5,000 வாா்டுகளிலும் 50 லட்சம் குடும்பங்களில் இருந்து நேரடியாக நிதி பெறுவதற்காக 90,000 தொண்டா்கள் இப்பணியில் நியமிக்கப்படுவதாக விஷ்வ இந்து பரிஷத் நிா்வாகிகள் தெரிவித்தனா்.

இந்தக் கூட்டத்தில், வி.எச்.பி. பொதுச் செயலாளா் மிலின்ட் பாண்ட், சேலம் ஆத்மானந்த சரஸ்வதி சுவாமிகள், வி.எச்.பி. மாநில அமைப்புச் செயலாளா் எஸ்.வி.ராமன், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் தேஜாராம், மாநகர ஒருங்கிணைப்பாளா் சேஷாராம் சீா்வீ உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.