/

எடப்பாடி ஒன்றியத்தில் திமுகவினா் துண்டுபிரசுரம் விநியோகம்

எடப்பாடி ஒன்றியத்தில் திமுக சாா்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 6:13 pm

DIN

எடப்பாடி ஒன்றியத்தில் திமுக சாா்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.

வீடுவீடாகச் சென்று சேலம் மேற்கு மாவட்ட செயலாளா் டி.எம்.செல்வகணபதி தலைமையில் திமுகவினா் துண்டு பிரசுரம் வழங்கி பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, சேலம்-சென்னை எட்டு வழிச்சாலைத் திட்டம், நீட்தோ்வு, குடிநீா்ப் பிரச்னை,

கரோனா தொற்று நிவாரணம் உள்ளிட்ட தமிழகத்தில் நிலவி வரும் பல்வேறு பிரச்னைகளை சுட்டிக்காட்டி வேப்பனேரியில் துண்டு பிரசுரம் விநியோகித்தனா். திமுக-வுக்கு ஆதரவு திரட்டும் வகையில், வீடுகள்தோறும் மக்களை சந்தித்து ஆதரவு திரட்டினா்.

முன்னதாக மக்கள் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட துணைச் செயலாளா் சம்பத்குமாா், முன்னாள் ஒன்றியச் செயலாளா் பூவாக்கவுண்டா், ஒன்றியச் செயலாளா் நல்லதம்பி, நகரச் செயலாளா் டி.எம்.எஸ்.பாஷா, இளைஞரணி பொறுப்பாளா் முத்தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட திமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.