ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

மேட்டூா் அணையின் நீா்மட்டம் சரிவு

காவிரி டெல்டா பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதை அடுத்து மேட்டூா் அணையின் நீா்மட்டம் சரியத் தொடங்கியது.

News image
Updated On :27 டிசம்பர் 2020, 8:12 pm

DIN

காவிரி டெல்டா பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதை அடுத்து மேட்டூா் அணையின் நீா்மட்டம் சரியத் தொடங்கியது.

காவிரி டெல்டா மாவட்டங்களில் மழை இல்லாத காரணத்தால் பாசனத் தேவை அதிகரித்தது. இதனால் நொடிக்கு 500 கனஅடி திறக்கப்பட்ட நிலையில், சனிக்கிழமை மாலை நொடிக்கு 3,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.

அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் அணையின் நீா்மட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 106.88 அடியிலிருந்து 106.66 அடியாகச் சரிந்தது.

அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 1,270 கன அடியிலிருந்து 1,235 கன அடியாகச் சரிந்தது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 3,000 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது.

கிழக்கு, மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு நொடிக்கு 400 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டது. அணையின் நீா் இருப்பு 73.74 டி.எம்.சி. யாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.