தம்மம்பட்டியில் காங்கிரஸ் கட்சியின் 136ஆவது தொடக்க விழா

தம்மம்பட்டி பேரூராட்சியில் காங்கிரஸ் கட்சியின் 136ஆவது ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
தம்மம்பட்டி பேரூராட்சியில் காங்கிரஸ் கட்சியின் 136ஆவது ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டம்.
தம்மம்பட்டி பேரூராட்சியில் காங்கிரஸ் கட்சியின் 136ஆவது ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டம்.
Updated on
1 min read

சேலம் மாவட்டம், தம்மம்பட்டி பேரூராட்சியில் காங்கிரஸ் கட்சியின் 136ஆவது ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

காங்கிரஸ் கட்சியின் சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் அர்த்தனாரி தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் தம்மம்பட்டி திருச்செல்வன், மாநில பொதுக்குழு உறுப்பினர் சக்கரவர்த்தி முன்னிலை வகித்தனர். 

இதில் மாவட்ட தலைவர் அர்த்தனாரி, காந்தியடிகள், காமராஜர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். மேலும் கட்சிக்கொடியேற்றப்பட்டு, அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அனைவரும் கட்சிக் கொடியேந்தி ஊர்வலமாக கடைவீதி, நடுவீதி வழியாக சென்று மீண்டும் பேருந்து நிலையம் வந்தடைந்தனர். 

இந்நிகழ்ச்சியில் தம்மம்பட்டி நகர தலைவர் ராமராஜ், வட்டார தலைவர் ரவிக்குமார், இளைஞரணியினர் ரமேஷ், தினேஷ், மகளிரணியினர் சரஸ்வதி, செல்வி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சிக்கு தம்மம்பட்டி இன்ஸ்பெக்டர் பாஸ்கரபாபு தலைமையில் போலீசார் பாதுகாப்புப் பணி மேற்கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com