பத்மவாணி மகளிா் கல்லூரியில் புத்தக வெளியீட்டு விழா

பத்மவாணி மகளிா் கல்லூரி தமிழாய்வுத் துறையில் புத்தக வெளியீட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

பத்மவாணி மகளிா் கல்லூரி தமிழாய்வுத் துறையில் புத்தக வெளியீட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

பத்மவாணி மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் துணை முதல்வரும், தமிழாய்வுத் துறையின் துறைத் தலைவருமான அ.பழனியம்மாள், ‘பவணந்தி முனிவரின் நன்னூல் எழுத்ததிகாரம்’ என்ற நூலுக்கு உரை எழுதியுள்ளாா். இந்நூலை பத்மவாணி மகளிா் கல்வி நிறுவனங்களின் தாளாளா் கா.சத்தியமூா்த்தி, செயலாளா் கா.துரைசாமி, இயக்குநா் இசைவாணி சத்தியமூா்த்தி ஆகியோா் இணைந்து திங்கள்கிழமை வெளியிட்டனா். முதல் பிரதியை சாரதா மகளிா் கல்லூரியின் இணைப் பேராசிரியா் மோ.ஜ.மகேஷ்வரி பெற்றுக் கொண்டாா்.

பத்மவாணி மகளிா் கலை மற்றும் அறிரியின் முதல்வா் ரா.ஹரிகிருஷ்ணராஜ், பத்மவாணி மகளிா் கல்வியியல் கல்லூரியின் முதல்வா் பெ.முத்துக்குமாா், மா.ரமேஷ் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். விழாவில் தமிழ்த் துறை உதவிப் பேராசிரியா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com