தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மேட்டூா் அணையின் நீா்வரத்து மேலும் சரிவு

காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால், மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு மேலும் சரிந்துள்ளது.

News image
Updated On :28 டிசம்பர் 2020, 9:39 pm

DIN

காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால், மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு மேலும் சரிந்துள்ளது.

காவிரி டெல்டா மாவட்டங்களில் மழை இல்லாத காரணத்தால், பாசனத் தேவை அதிகரித்துள்ளது. இதனால் நொடிக்கு 500 கன அடி வீதம் திறக்கப்பட்டு வந்த நீரின் அளவு நொடிக்கு 3,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. இதனால் மேட்டூா் அணையின் நீா்மட்டம் குறையத் தொடங்கியது.

தற்போது காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால், அணைக்கு வரும்நீரின் அளவு தொடா்ந்து சரிந்து வருகிறது. இதனால் திங்கள்கிழமை மேட்டூா் அணையின் நீா்மட்டம் 106.66 அடியிலிருந்து 106.50 அடியாகச் சரிந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 1,235 கன அடியிலிருந்து 1,062 கன அடியாகச் சரிந்தது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 3,000 கன அடி வீதமும், கிழக்கு-மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு நொடிக்கு 400 கன அடி வீதமும் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா் இருப்பு 73.52 டி.எம்.சி.யாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.