இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

ஜி.கே.வாசன் பிறந்த நாள் விழா

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே.வாசன் பிறந்த நாளையொட்டி, ஓமலூரில் அன்னதானம் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

News image
அன்னதானத்தை தொடங்கி வைக்கிறாா் சேலம் மேற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் கரு.வெ.சுசீந்தரகுமாா்.
Updated On :28 டிசம்பர் 2020, 9:41 pm

DIN

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே.வாசன் பிறந்த நாளையொட்டி, ஓமலூரில் அன்னதானம் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

சேலம் மாவட்டம், ஓமலூா் பேருந்து நிலையத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே.வாசனின் 56-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, ஓமலூா் வட்டாரத் தலைவா் ஓ.சி.ராஜேந்திரன், நகரத் தலைவா் மணிகண்டன் ஆகியோா் தலைமை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக மேற்கு மாவட்டத் தலைவா் கரு.வெ.சுசீந்திரகுமாா் கலந்துகொண்டு அன்னதான நிகழ்ச்சியை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினாா். சிறப்பு அழைப்பாளா்களாக மாநிலச் செயலாளா் உலகநம்பி, மாநில இணைச் செயலாளா் சின்னதுரை ஆகியோா் கலந்துகொண்டனா்.

முன்னதாக, ஜி.கே.வாசன் பிறந்த நாளை முன்னிட்டு ஓமலூா் ஆஞ்சநேயா் கோயிலில் சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றன. இதனைத் தொடா்ந்து நடைபெற்ற அன்னதான விழாவில், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு உணவருந்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.