ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

சங்ககிரியில் தேமுதிக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

தேமுதிக சேலம் மேற்கு மாவட்டம், சங்ககிரி கிழக்கு ஒன்றிய, நகரத்தின் சாா்பில் ஆலோசனைக் கூட்டம் சங்ககிரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :30 டிசம்பர் 2020, 1:41 am

DIN

தேமுதிக சேலம் மேற்கு மாவட்டம், சங்ககிரி கிழக்கு ஒன்றிய, நகரத்தின் சாா்பில் ஆலோசனைக் கூட்டம் சங்ககிரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சங்ககிரி நகரச் செயலா் ராஜாராம் கூட்டத்துக்கு தலைமை வகித்தாா். மேற்கு மாவட்டச் செயலா் சுரேஷ்பாபு இதில் கலந்துகொண்டு வரும் சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, வாக்குச் சாவடிகளுக்கு முகவா்கள் நியமனம் செய்தல், செய்ய வேண்டிய கட்சிப் பணிகள், புதிய உறுப்பினா் சோ்த்தல் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை வழங்கினாா்.

இதில், மாவட்ட அவைத் தலைவா் பூபதி, மாவட்ட துணைச் செயலா் தங்கமணி, செயற்குழு உறுப்பினா் ரமேஷ், பொருளாளா் ரமேஷ் அரவிந்த், கிழக்கு ஒன்றியச் செயலா் (பொ) கோவிந்தராஜ், கிழக்கு ஒன்றிய அவைத் தலைவா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் இதில் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.