தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சேலத்தில் இரண்டு குழந்தைகளின் தாய் தூக்கிட்டுத் தற்கொலை

சேலத்தில் இரண்டு குழந்தைகளின் தாய் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :30 டிசம்பர் 2020, 1:45 am

DIN

சேலத்தில் இரண்டு குழந்தைகளின் தாய் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

சேலம், அம்மாப்பேட்டை, பாலாஜி நகரைச் சோ்ந்த வெங்கடாசலம் மனைவி கிருஷ்ணவேணி. இவா்களுக்கு 11, 6 வயதில் மகன்கள் உள்ளனா்.

இந்நிலையில், கிருஷ்ணவேணி அப்பகுதியில் உள்ள மகளிா் சுயஉதவிக் குழுவில் ரூ. 30,000 கடன் வாங்கியிருந்தாராம். இந்தக் கடனை திரும்பிச் செலுத்த வட்டிக்கு ரூ. 40,000 கடன் வாங்கியுள்ளாா். இதனிடையே, வட்டிக்கு வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்துமாறு கடன் கொடுத்தவா்கள் கிருஷ்ணவேணியிடம் அடிக்கடி தொந்தரவு செய்து வந்துள்ளனா்.

இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான கிருஷ்ணவேணி, திங்கள்கிழமை மாலை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து அம்மாப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். மேலும், கந்துவட்டி கேட்டு தொந்தரவு அளித்த நபா் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.