திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

மேட்டூா் அணையில் இருந்து தண்ணீா் திறப்பு அதிகரிப்பு

மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறப்பு நொடிக்கு 8,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :30 டிசம்பர் 2020, 1:43 am

DIN

மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறப்பு நொடிக்கு 8,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேட்டூா் அணையின் நீா்மட்டம் கடந்த 14 நாள்களாக 106 அடியாக இருந்து வருகிறது. கடந்த ஒரு வார காலமாக காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால், மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக குறைந்து வருகிறது. செவ்வாய்க்கிழமை காலை 8 மணி நிலவரப்படி மேட்டூா் அணைக்கு நீா்வரத்து நொடிக்கு 900 கன அடியாக இருந்தது.

காவிரி டெல்டா பகுதிகளில் மழை குறைந்து விட்டதாலும், விவசாயத்துக்கு தண்ணீா் தேவை அதிகரித்துள்ளதாலும் செவ்வாய்க்கிழமை பகல் 12 மணியிலிருந்து டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு நொடிக்கு 3,000 கன அடியிலிருந்து 8,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கிழக்கு- மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு நொடிக்கு 400 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது.

மேட்டூா் அணையின் நீா்மட்டம் செவ்வாய்க்கிழமை காலை 106.33 அடியாக இருந்தது. அணையின் நீா் இருப்பு 73.28 டி.எம்.சி.யாக இருந்தது. டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 8,000 கன அடி தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.