கோப்புப் படம்
கோப்புப் படம்

வாழப்பாடியில் ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள் சுய முடக்கம்: 7 நாள்களுக்கு ஷேர் ஆட்டோ இயங்காது என அறிவிப்பு

வாழப்பாடி பகுதியில், வெளியில் இருந்து வருவோர்களால், கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள் சுய முடக்கத்தை கடைபிடித்து, 7 நாள்களுக்கு ஆட்டோக்கள் இயங்காதென அறி

வாழப்பாடி பகுதியில், வெளியில் இருந்து வருவோர்களால், கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள் சுய முடக்கத்தை கடைபிடித்து, 7 நாள்களுக்கு ஆட்டோக்கள் இயங்காதென அறிவித்துள்ளனர்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதிக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் செங்கல்பட்டு மற்றும் மும்பை பகுதியில் இருந்து ஏராளமானோர் சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர். இவர்களை கண்டறிந்து வாழப்பாடி வட்டார சுகாதாரத்துறையினர் சளி மாதிரி எடுத்து, கரோனா பரிசோதனை நடத்தி வருகின்றனர். கடந்த சில தினங்களில் மட்டும் வாழப்பாடி பகுதியில் 10க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. சேலம் மற்றும் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நூற்றுக்கும் மேற்பட்டோர் அவரவர் வீடுகளிலேயேதனிமைப்படுத்தப்பட்டு சுகாதார துறையினரால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் வாழப்பாடி பகுதியில் கரோனா தொற்று  பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் பரவியுள்ளது. எனவே, கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த ஒத்துழைப்பு கொடுக்கும் நோக்கில், வாழப்பாடியில் இருந்து பேளூர், பெரியகிருஷ்ணாபுரம், சிங்கிபுரம், மன்நாயக்கன்பட்டி உள்ளிட்ட பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படும் 230க்கும் மேற்பட்ட ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள் சுய முடக்கத்தை ஏற்றுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை முதல் தொடர்ந்து 7 நாள்களுக்கு ஷேர் ஆட்டோக்கள் இயங்காதென அறிவித்துள்ளனர். 

இதுகுறித்து வாழப்பாடி ஆட்டோ ஓட்டுநர்கள் சங்க தலைவர் கண்ணன், செயலாளர் செயலாளர் சுரேஷ் ஆகியோர் கூறியதாவது:
வாழப்பாடி பகுதியில், பேருந்துகளை அதிக ளவில் பயன்படுத்த விரும்பாத கிராமப்புற மக்கள்,  ஷேர் ஆட்டோக்கள்  பயன்படுத்தி வருகின்றனர். வாழப்பாடி பகுதியில் கரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், ஆட்டோ ஓட்டுனர்கள் மட்டுமின்றி பொதுமக்கள் பயணிகள் நலன் கருதியும், கரோனா பரவலை தடுப்பதற்கு சுகாதாரத் துறையினர் மற்றும் காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு கொடுக்கும் வகையிலும், ஷேர் ஆட்டோ ஓட்டுனர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஏழு நாள்களுக்கு ஆட்டோக்களை இயக்குவதில்லை என முடிவெடுத்துள்ளோம் என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com