தம்மம்பட்டியில் திறக்கப்பட்டுள்ள, டீக் கடைகள், கரும்புசாறு கடைகளில், சுகாதாரத்தை கடைப்பிடிக்காததால், நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் தடை உத்தரவு, நேற்று தளர்த்தப்பட்டு, 34 வகையான கடைகளை திறக்க, அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, தம்மம்பட்டி சிறப்புநிலை பேரூராட்சி பகுதியில் உள்ள, 50 க்கும் மேற்பட்ட ஓட்டல்கள், டீக்கடைகள்,மற்றும் சாலையோரம் உள்ள கரும்புச்சாறு கடைகள் உள்பட, மற்ற கடைகளும் நேற்று திறக்கப்பட்டன. இந்நிலையில், தம்மம்பட்டியில் உள்ள டீக்கடைகள், கரும்புச்சாறு கடைகளில், சுகாதாரத்துறை அறிவுறுத்திய, சுகாதார விதிமுறைகளை பின்பற்றவில்லை, இதனால், நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து, சமூகநல ஆர்வலர்கள் கூறியதாவது, தம்மம்பட்டியில் உள்ள டீக்கடைகளில், சுகாதாரத்துறை அறிவுறுத்தியபடி, வாடிக்கையாளர்களின் கைகளை கழுவ, கிருமி நாசினியான சானிடைசர் வைக்கப்படவில்லை. டீக்கடைகளில் டீ, காபி வழங்கப்படும் கண்ணாடி டம்ளர்களை, பயன்படுத்திய பின், ஒவ்வொரு முறையும் சுடுதண்ணீர் மூலம் கழுவி சுத்தம் செய்யப்படுவதில்லை. டீக்கடைகளில் சமூக இடைவெளியை யாரும் கடைபிடிக்காமல், வாடிக்கையாளர்கள் கும்பலாக நிற்கின்றனர்.
இதேபோல்தான், சாலையோரம் உள்ள கரும்புச்சாறு கடைகளில், கண்ணாடி டம்ளர்களை வெந்நீர் கொண்டு சுத்தம் செய்யாமல், கரும்புச்சாறு வழங்குகின்றனர். இதனால், நோய்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது, இக்கடைகளில், சுகாதாரமுறையை கடைபிடிக்க, பேரூராட்சி நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!

பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோயிலில் நரசிம்ம ஜெயந்தி சிறப்பு வழிபாடு!

ஓடிடியில் வெளியாகிறது மூன்றாம் பிறை!

பொதுத்துறை வங்கியில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


