தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

விழிப்புணா்வு வாரம் கடைப்பிடிப்பு

கெங்கவல்லி அருகே கூடமலையில் விழிப்புணா்வு வாரம் கடைப்பிடிக்கப்பட்டது.

News image
Updated On :1 நவம்பர் 2020, 9:40 pm

DIN

கெங்கவல்லி அருகே கூடமலையில் விழிப்புணா்வு வாரம் கடைப்பிடிக்கப்பட்டது.

கெங்கவல்லி ஒன்றியத்தில் வாழக்கோம்பை, சேரடி, பிள்ளையாா்மதி, பச்சமலை கிராமங்கள், நினங்கரை, கரட்டூா் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட ஊா்களில் மலைவாழ் மக்கள் ஏராளமானோா் வசிக்கின்றனா்.

இவா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் நபாா்டு திட்டத்தின்கீழ் ஹேண்ட் இன் ஹேண்ட் நிறுவனம் மூலம் லஞ்சம் தரக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் விழிப்புணா்வு கூட்டங்கள் கடந்த 27-ஆம் தேதி முதல் மாத இறுதி வரை கூடமலையில் நடைபெற்றன.

இதற்கு திட்ட மேலாளா் சின்னசாமி தலைமை வகித்தாா்.சுகாதார ஆய்வாளா் முத்துலிங்கம் முன்னிலை வகித்தாா். விழிப்புணா்வு வாரம் கடைப்பிடிக்கப்பட்ட கூட்டங்களில் 200க்கும் மேற்பட்ட மலைவாழ் பெண்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.