சாம்பியன்ஸ் லீக்கில் பார்சிலோனா அணி 8-3 என நியூகேஸிலை வீழ்த்தி, வரலாற்று வெற்றியுடன் காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.
நியூகேஸிலுக்கு எதிரான முதல் கட்ட போட்டியில் 1-1 என சமநிலையில் இருக்க, இரண்டாம் கட்ட போட்டியில் 7-2 என அபார வெற்றி பெற்றது.
இரண்டாம் கட்ட போட்டி பார்சிலோனாவின் சொந்த திடலான கேம்ப் நௌவில் நடைபெற்றது. இந்தப் போடியில் முதல் பாதியில் 3-2 முன்னிலை வகித்த பார்சிலோனா இரண்டாம் பாதியில் 7-2 என மாற்றியது.
இந்தப் போட்டியில் ரஃபீனியா 6,72ஆவது நிமிஷத்தில் கோல் அடித்து அசத்தினார். மேலும், 2 அசிஸ்டுகளைச் செய்து ஆட்ட நாயகன் விருதும் வென்றார்.
பெர்னல் (18’) ஒரு கோல், லெவண்டாவ்ஸ்கி 2 கோல்களும் (56, 61) லாமின் யமால் பெனால்டியில் ஒரு கோல் (45+6) , ஃபெர்மின் லோபஸ் (51’) ஒரு கோலும் அடித்தார்கள்.
முதல்பாதியில் நியூகேஸில் அணி சிறப்பாக விளையாடி பலத்தை காண்பித்தார்கள். இரண்டாம் பாதியில் அந்த அணியை மூச்சு திணற திணற பார்சிலோனா வீரர்கள் கலங்கடித்தார்கள்.
சொந்த மண்ணில் பார்சிலோனா அணியை வீழ்த்துவது கடினமாக இருந்துவருகிறது. நியூ கேஸில் அணி தனது சாம்பியன்ஸ் லீக் வரலாற்றிலேயே மிக மோசமான தோல்வியை சந்தித்துள்ளது.
பிரீமியர் லீக் விளையாடும் அணிகளில் இதற்கு முன்பாக டோட்டன்ஹாம் ஸ்பர் அணி 2019ல் பயர்ன் மியூனிக் அணியிடம் 7-2 என தோல்வியுற்றது. பார்சிலோனா - நியூகேஸில் போட்டியும் இந்தப் போட்டியுடன் சமநிலையில் இருக்கிறது.
Summary
Raphinha and Robert Lewandowski both scored twice as the barcelona ran riot in the second half against brave Newcastle.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆப்கானிஸ்தானை இன்னிங்ஸ், 300 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!

நியூசி.க்கு எதிராக இங்கிலாந்து அபார வெற்றி; மீண்டும் எழுச்சி பெறுகிறதா பேஸ்பால் யுக்தி?

22 ஆண்டுகளுக்குப் பிறகு பிரீமியர் லீக்கில் கோப்பை வென்றது ஆர்செனல்!








