பொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

ஹன்சி ஃபிளிக் தலைமையில் பார்சிலோனா 300 கோல்கள்..! கிளப் வரலாற்றில் 2ஆம் இடம்!

தலைமைப் பயிற்சியாளர் ஹன்சி ஃபிளிக் தலைமையில் பார்சிலோனா கால்பந்து அணி குறித்து...

Hansi Flick, barcelona team.

ஹன்சி ஃபிளிக், பார்சிலோனா அணியினர். - படங்கள்: எஃப்சி பார்சிலோனா.

Published On :

ஸ்பெயின் உள்ள கால்பந்து கிளப் அணியான பார்சிலோனா அணி அதன் தலைமைப் பயிற்சியாளர் ஹன்சி பிளிக் தலைமையில் 107 போட்டிகளில் 300 கோல்களை நிறைவு செய்துள்ளது.

ஜெர்மனைச் சேர்ந்த பயிற்சியாளர் ஹன்சி ஃபிளிக் கடந்த 2024, மே 29ஆம் தேதி பார்சிலோனோவில் இணைந்தார். இவரது ஒப்பந்தம் ஜூன் 2027 வரை இருக்கிறது.

அனைத்து போட்டிகளிலும் அசத்தும் பார்சிலோனா

கடந்த சீசனில் ஹன்சி ஃபிளிக் தலைமையில் பார்சிலோனா அணி லா லிகா, ஸ்பானிஷ் கோப்பை, ஸ்பானிஷ் சூப்பர் கோப்பைகளை வென்று அசத்தியது.

தற்போதைய சீசனில் ஸ்பானிஷ் கோப்பையை தவறவிட்ட பார்சிலோனா ஸ்பானிஷ் சூப்பர் கோப்பை வென்றுள்ளது. லா லிகாவில் முதலிடமும் சாம்பியன்ஸ் லீக்கில் காலிறுதியிலும் இருக்கிறது.

ஹன்சி ப்ளிக் தலைமையில் பார்சிலோனா அணி ஒரு போட்டிக்கு சராசரியாக 2.81 அளவில் கோல் அடிக்கிறது. நள்ளிரவு நடந்த போட்டியில் மார்கஸ் ராஷ்போர்டு 300ஆவது கோலை பதிவு செய்தார். அடுத்ததாக, லெவண்டாவ்ஸ்கி 301ஆவது கோலை அடித்தார்.

முந்தைய சீசனில் பார்சிலோனா அணி 174 கோல்களை அடித்தது. கிளப் வரலாற்றிலேயே இது 3ஆவது இடத்தில் இருக்கிறது. இந்த சீசனில் 68 போட்டிகளில் 182 கோல்கள் அடித்து அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • 2011–12 : 190 கோல்கள் (பெப் கார்டியாலோ தலைமையில்)

  • 2025-26 : 182* கோல்கள் (ஹன்சி பிளிக் தலைமையில்)

  • 2014–15 : 175 கோல்கள் (லூயூஸ் என்ரிக் தலைமையில்)

  • 2024–25 : 174 கோல்கள் (ஹன்சி பிளிக் தலைமையில்)

  • 2015–16 : 173 கோல்கள் (லூயூஸ் என்ரிக் தலைமையில்)

  • 2016–17 : 171 கோல்கள்  (லூயூஸ் என்ரிக் தலைமையில்)

Summary

fc barcelona 300 goals in the Hansi Flick era

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.