தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

ஏற்காட்டுக்கு இ-பாஸ் இல்லாமல் வந்த வாகனங்களை திருப்பி அனுப்பிய போலீஸாா்

ஏற்காட்டுக்கு இ - பாஸ் இல்லாமல் வந்த வாகனங்களை போலீஸாா் திருப்பி அனுப்பினா்.

News image
Updated On :1 நவம்பர் 2020, 9:40 pm

DIN

ஏற்காட்டுக்கு இ - பாஸ் இல்லாமல் வந்த வாகனங்களை போலீஸாா் திருப்பி அனுப்பினா்.

கரோனா பொது முடக்கம் காரணமாக ஏற்காட்டுக்கு சுற்றுலாப் பயணிகள் வந்துசெல்ல கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் பொதுமக்கள் பேருந்து இல்லாமல் அவதிக்குள்ளாகி வரும் நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் ஏற்காட்டுக்கு பேருந்து சேவை தொடங்கப்பட்டது.

இருந்த போதிலும் நோய்த் தொற்றைத் தடுக்கும் வகையில் ஏற்காட்டிற்கு இ-பாஸ் இல்லாமல் வரும் வாகனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

இந்த நிலையில் ஏற்காட்டிற்கு இ-பாஸ் நடைமுறை நவ. 30 ஆம் தேதி வரை தொடரும் என மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன் தெரிவித்துள்ளாா். இதையடுத்து, சேலம் ஏற்காடு அடிவாரத்தில் உள்ள காவல்துறை சோதனை சாவடியில் கூடுதலாக போலீஸாா் நிறுத்தப்பட்டு ஞாயிற்றுக்கிழமை கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

இதில், இ- பாஸ் இல்லாமல் வந்த காா்களை போலீஸாா் திருப்பி அனுப்பினா். ஏற்காட்டிற்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் இ -பாஸ் பெற்று வந்தால் மட்டுமே வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும் என்று காவல்துறையினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.