தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

ஏற்காடு மலைகிராமங்களுக்கு பேருந்துகள் இயக்கம்

ஏற்காடு மலை கிராமங்களுக்கு பேருந்துகள் இயங்க துவங்கியதால் இயல்பு வாழ்க்கைக்கு மலைகிராம மக்கள் திரும்பியுள்ளனர்.  

News image
Updated On :1 நவம்பர் 2020, 8:52 am

DIN

ஏற்காடு மலை கிராமங்களுக்கு பேருந்துகள் இயங்க துவங்கியதால் இயல்பு வாழ்க்கைக்கு மலைகிராம மக்கள் திரும்பியுள்ளனர்.  

சேலம் போக்குவரத்துதுறை சார்பில் 5 அரசுப் பேருந்துகளை கிராமங்களுக்கும், 3 அரசுப் பேருந்துகளை சேலம் - ஏற்காடு மலைப்பாதை வழியாகவும், குப்பனூர் வழிதடத்திலும் ஞாயிறுக்கிழமை இயக்கப்பட்டன. மேலும் இரு தனியார் பேருந்துகளும் இயங்கி வருகிறது. ஆனால், பேருந்தில் குறைந்த அளவில் பயணிகள் பயணித்து வருகின்றனர்.

இருப்பினும், வழக்கம்போல் வாரச் சந்தை வியாபாரிகள் வருகை புரிந்துள்ளனர். மேலும் சுற்றுலாப் பயணிகள் வருகையும் அதிகரித்து சுற்றுலாப் பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டு வருகிறது. ஏற்காடு - காந்தி பூங்கா பேருந்து நிலைய சாலையில் வியாபாரிகள் கடைகளை வைத்து ஆக்கிரமித்துள்ளதால் இரு சக்கர வாகனங்களை நிறுத்தி செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

காவல்துறையினர் போக்குவரத்து, சாலை விதி சட்டத்தை அமல்படுத்த தயங்குகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.