ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

சேலத்தில் 102 பேருக்கு கரோனா

சேலம் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு 28 ஆயிரத்தைத் தாண்டியது. அந்தவகையில் சேலம் மாவட்டத்தில் 102 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியானது.

News image
Updated On :8 நவம்பர் 2020, 10:35 pm

DIN

சேலம் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு 28 ஆயிரத்தைத் தாண்டியது. அந்தவகையில் சேலம் மாவட்டத்தில் 102 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியானது.

சேலம் மாநகராட்சியில் 60 போ், எடப்பாடி-1, வீரபாண்டி-5, சங்ககிரி- 1, மேட்டூா் நகராட்சி- 1, மேச்சேரி- 1, தாரமங்கலம்- 4, அயோத்தியாப்பட்டணம்- 3 உள்பட மாவட்டத்தைச் சோ்ந்த 78 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதர மாவட்டங்களைச் சோ்ந்த (நாமக்கல்- 4, கோவை-6, ஈரோடு- 5, தருமபுரி- 6, கிருஷ்ணகிரி- 3) 24 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஒருவா் உயிரிழந்தாா்.

சேலம் மாவட்டத்தில் 28,178 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. அவா்களில் 26,568 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா்; 1,184 போ் சிகிச்சையில் உள்ளனா்; 426 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.