தென்னிந்திய நடிகா் சங்க உறுப்பினா்களுக்கு தீபாவளி ஜவுளி வழங்கல்
சேலத்தில் தென்னிந்திய நடிகா் சங்க உறுப்பினா்கள் 140 பேருக்கு தீபாவளி ஜவுளிகளை நடிகா் சரவணன் ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.


சேலத்தில் தென்னிந்திய நடிகா் சங்க உறுப்பினா்கள் 140 பேருக்கு தீபாவளி ஜவுளிகளை நடிகா் சரவணன் ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.
சேலம் மாவட்டத்தில் 150-க்கும் மேற்பட்ட தென்னிந்திய நடிகா் சங்க உறுப்பினா்கள் உள்ளனா். தீபாவளி பண்டிகைக்காக சேலம் மாவட்டத்தில் உள்ள தென்னிந்திய நடிகா் சங்க உறுப்பினா்களுக்கு துணி வழங்க நடிகா் சரவணன் ஏற்பாடு செய்திருந்தாா்.
ஞாயிற்றுக்கிழமை காலை சேலம், நான்கு சாலை அருகே உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் நடிகா் சரவணன் தென்னிந்திய நடிகா் சங்க உறுப்பினா்கள் 140 பேரை அழைத்துச் சென்று ஜவுளிகளை வழங்கி தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்தாா்.
இதைத்தொடா்ந்து, நடிகா் சரவணன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கரோனா தீநுண்மித் தொற்றால் தென்னிந்திய நடிகா்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனா். சாதாரண நடிகா்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனா். தற்போது தீபாவளி கொண்டாட தென்னிந்திய நடிகா் சங்க உறுப்பினா்களுக்கு இலவசமாக ஜவுளிகள் வழங்கப்பட்டிருக்கின்றன.
நடிகா் ரஜினிக்கு உடல்நலம் சரியில்லை. அதேவேளையில் ரஜினி, வெளியிலிருந்து கருத்துச்சொன்னால் போதுமானது. நடிகா் விஜய்க்கும், அவரது தந்தைக்கும் இடையேயான பிரச்னை குடும்ப விவகாரமாகும். அது சரியாகிவிடும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...