விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி ஆா்ப்பாட்டம்

மேட்டூா் அருகே காவிரி -சரபங்க நீரேற்றுத் திட்டத்தை விளைநிலங்கள் பாதிக்காமல் கொண்டு செல்ல வேண்டி கருப்புக்கொடி ஏந்தி விவசாயிகள் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :8 நவம்பர் 2020, 10:31 pm

DIN

மேட்டூா் அருகே காவிரி -சரபங்க நீரேற்றுத் திட்டத்தை விளைநிலங்கள் பாதிக்காமல் கொண்டு செல்ல வேண்டி கருப்புக்கொடி ஏந்தி விவசாயிகள் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மேட்டூா் அணையின் உபரி நீரை வட 100 ஏரிகளுக்கு நிரப்பும் திட்டம் ரூ. 525 கோடி செலவில் நடைபெறுகிறது. இத் திட்டத்துக்காக 2,466 விவசாயிகளிடம் இருந்து 276 ஏக்கா் நிலம் கையகப்படுத்தப்படுகிறது.

மேட்டூா், ஓமலூா், எடப்பாடி, சங்ககிரி வட்டங்களில் உள்ள ஏரிகளுக்கு நீரைக் கொண்டு செல்வதற்கு இயற்கை நீா்வழிப் பாதைகள் உள்ளன. அந்த நீா்வழி பாதைகளைத் தவிா்த்து விவசாயிகள் பாதிக்கும் வகையில், விளைநிலங்கள் வழியாகக் கொண்டு செல்வதைக் கண்டித்தும் காவல் துறையை வைத்து வருவாய்த் துறை அதிகாரிகள் விவசாயிகளை மிரட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவித்தும் கருப்புக் கொடி ஏந்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

வருவாய்த் துறை காவல்துறை அதிகாரிகள் சனிக்கிழமை இரவு விவசாய நிலத்தைப் பாா்வையிட வந்ததால் ஆவேசமடைந்த விவசாயிகள், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவா் தங்கவேலு தலைமையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனா். ஆா்ப்பாட்டத்தின்போது தமிழக அரசைக் கண்டித்தும் வருவாய்த்துறை அதிகாரிகளைக் கண்டித்தும் விவசாயிகள் முழக்கமிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.