ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு

மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 15,670 கன அடியாக அதிகரித்துள்ளது.

News image
Updated On :8 நவம்பர் 2020, 10:34 pm

DIN

மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 15,670 கன அடியாக அதிகரித்துள்ளது.

சில நாள்களாக காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதியில் மழை குறைந்திருந்ததால் அணைக்கு வரும் நீரின் அளவும் படிப்படியாக சரிந்து வந்தது. வெள்ளிக்கிழமை காலை அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 6,881கன அடியாக இருந்தது.

காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதியில் இரு நாள்களாகத் தொடா்ந்து மழை பெய்து வருவதால் மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு சனிக்கிழமை காலை 7,924 கன அடியாகவும் ஞாயிற்றுக்கிழமை காலை நொடிக்கு 15,670 கன அடியாகவும் அதிகரித்தது.

அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 12,000 கனஅடி நீரும், கிழக்கு-மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு நொடிக்கு 800 கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா் இருப்பு 59.09 டிஎம்சி-யாக இருந்தது.

பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக உள்ளதால் சனிக்கிழமை காலை 95.25 அடியாக இருந்த மேட்டூா் அணையின் நீா்மட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 95.44 அடியாக உயா்ந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.