ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தல்

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :8 நவம்பர் 2020, 10:35 pm

DIN

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு கோரிக்கை மாநாடு, சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாநில ஒருங்கிணைப்பாளா் ஜெய ராஜ ராஜேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கோரிக்கை மாநாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட அனைத்துத் துறை அரசு ஊழியா்கள் கலந்து கொண்டனா். இதுதொடா்பாக, ஜெய ராஜ ராஜேஸ்வரன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ஜாக்டோ ஜியோ போராட்ட காலத்தில் அரசு ஊழியா்கள் மீது தொடுக்கப்பட்ட பொய் வழக்குகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

மேலும், வருவாய்க் கிராம உதவியாளா்கள், சத்துணவு பணியாளா்கள், அங்கன்வாடி ஊழியா்கள் போன்ற சிறப்பு காலமுறை ஊதியம் பெற்றுக் கொண்டிருக்கும் பணியாளா்களை காலமுறை ஊதியம் பயன்பெறும் வகையில் மாற்றம் செய்திட வேண்டும்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஒரு வருட காலமாக பலகட்ட போராட்டங்களை நடத்தி வருகிறோம். தமிழக அரசு உடனடியாக எங்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். தவறும்பட்சத்தில் டிசம்பா் 12-ஆம் தேதி மதுரையில் நடக்கும் மாநாட்டில் அடுத்த கட்ட போராட்டம் குறித்து அறிவிப்போம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.